2030க்குள் சேவை வர்த்தக அளவு விரிவாக்கம்

சீன வணிக அமைச்சகம் உள்ளிட்ட எட்டு அமைச்சகங்கள் 26ஆம் நாள் சேவை வர்த்தக வளர்ச்சிக்கான 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை வெளியிட்டு, புதிய இயக்காற்றலை வளர்ப்பது குறித்து, ஏழு துறைகளைச் சேர்ந்த 25 முக்கிய பணிகளை ஏற்படுத்தியுள்ளன.

இத்திட்டத்தின்படி 2030 ஆம் ஆண்டுக்குள் சேவை வர்த்தக அளவினை நிலையாக விரிவடையச் செயவதோடு, சீனாவின் சேவைகளின் சர்வதேச போட்டித்தன்மையை அதிகரிக்கவும் வேண்டும். உற்பத்தி மற்றும் வாழ்க்கை சார்ந்த சேவைகள் என்ற இரண்டு துறைகளின் மூலம் வளர்ச்சி திசையை இத்திட்டம் வெளிப்படுத்துவது இது முதன்முறையாகும்.

மேலும், உற்பத்தி மற்றும் சேவை ஒருங்கிணைப்பின் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், சுற்றுலா, கலாசாரம், சீன பாரம்பரிய தனிச்சிறப்புடைய சேவைகள் உள்ளிட்ட வாழ்க்கை சார்ந்த துறைகளின் ஏற்றுமதி மேம்பாடுகளை உருவாக்க வேண்டும் என்றும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author