வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Estimated read time 1 min read

வங்கக்கடலில் வரும் நவம்பர் 30-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது டிசம்பர் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரைப் பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “தெற்கு அந்தமான் கடற்பரப்பில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, வங்கக்கடலில் நவம்பர் 30-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது, குறிப்பாக அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் இந்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வரும் டிசம்பர் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும், தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடற்கரைப் பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author