‘சுய-புரட்சியின் ஆற்றல்: சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய-ஆட்சிமுறையும் உலகிற்கு அதன் அர்த்தமும்’எனும் தலைப்பிலான உலகளாவிய உரையாடல் நிகழ்வு அண்மையில், லாவோஸ், வியட்நாம், நேபாளம் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன், வெளிநாட்டிற்கான சீனாவின் தூதரகங்கள், பல நாடுகளின் அரசு நிறுவனங்கள், சிந்தனைக் கிடங்கு அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் முதலியவற்றுடன் இணைந்து இந்நிகழ்வுகளை நடத்தியது.
தனிச்சிறப்பு வாய்ந்த உரைகள், நிபுணர்களின் விவாதம், குறுக்குத் துறை பரிமாற்றம் முதலிய வடிவங்களில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வின் எழுச்சியை சிஜிடிஎன் வெளிக்காட்டியது. இதன் மூலம், புதிய யுகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சுய புரட்சியின் தத்துவத்தின் முக்கிய அம்சங்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறைப் பணியின் சாதனைகள் முதலானவை முறையாக விளக்கம் அளிக்கப்பட்டன.
கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிமுறைப் பணியை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னேற்றி வருவதோடு, நாட்டின் ஆட்சிமுறை திறனை அதிகரித்து வருவது, பல நாடுகளும் சொந்த நாட்டின் நிலைமைக்கு ஏற்க அவர்தம் கட்சியின் மேலாண்மைக்கு மதிப்புள்ள அனுபவங்களை வழங்கியுள்ளது என்று ஆசியாவின் பல நாடுகளின் அரசியல், வணிகம் மற்றும் ஊடகத் துறையினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
