வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்களின் வசதிக்காக பந்தல் அமைப்பு !

அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்களின் வசதிக்காக, பந்தல், கம்பளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில், ஆலயம் முன்பு பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும் இடம் மற்றும் ஆலய வாசலில் பக்தர்களுக்கு பாதம் சுடாத வகையில் கம்பளங்கள் விரிக்கப்பட்டுள்ளன.

கோடைக்காலம் முழுவதும் இந்த வசதி தொடரும் என பேராலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author