நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு 7ஆம் தேதி நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
நாடாளுமன் ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக, அஸ்ஸாம், பிகாா், சத்தீஸ்கா், கோவா, குஜராத், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் உள்ளிட்ட 1,351 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.