சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 5ஆம் நாள் முற்பகல் சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டார்.
பிரான்ஸ் அரசுத் தலைவர், செர்பியா அரசுத் தலைவர், ஹங்கேரி அரசுத் தலைவர் மற்றும் தலைமையமைச்சர் ஆகியோரின் அழைப்பை ஏற்று, அவர் இந்த 3 நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி போங் லீயுவான் அம்மையார், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், மத்திய கமிட்டி அலுவலகத்தின் இயக்குநர் சைய்ச்சீ, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ முதலியோர் அவருடன் சேர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.