ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இடை விடாது பெய்து வரும் கன மழை காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன் படி வினாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர் வரத்து, ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author