‘மதுரைக்கு பெருமை சேர்த்த மதுரை வீரன்’: விஜயகாந்த் பற்றி ரஜினி புகழாரம்

சென்ற வாரம், மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
இதனை, கேப்டனின் மனைவியும், அக்கட்சியின் தலைவருமான பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில்,”என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கவுரவித்துள்ளார்கள்.

ரொம்ப மகிழ்ச்சி. அதுமட்டுமின்றி, பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் விஜயகாந்தின் வரலாற்றையும் பதிவிட்டுள்ளார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது….

இனிமே விஜயகாந்த் மாதிரி ஒருத்தரை பாக்கவே முடியாது. அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன். மதுரையில் பிறந்த ஒரு மதுரைவீரன் கேப்டன் விஜயகாந்த். ” என நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author