‘அதிமுக உடையவில்லை..ஆனால்’: EPS-க்கு எஸ்.பி.வேலுமணி வைத்த செக்  

Estimated read time 1 min read

தமிழக அரசியலில் அதிமுக-வின் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று சென்னையில் விளக்கம் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், சி.வி. சண்முகம் தலைமையிலான அதிருப்தி குழுவிற்கும் இடையே மோதல் முற்றியுள்ள சூழலில், கட்சி உடையவில்லை என்றும், சில மாற்றங்களை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சி.வி.சண்முகம் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்.பி.வேலுமணி, அதிமுக-வை உடைப்பதாகக் கூறப்படும் புகார்களை முற்றிலுமாக மறுத்தார்.
“நாங்கள் அதிமுக-வை இரண்டாக உடைக்கிறோம் என்று பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அவதூறானவை.

அத்தகைய நோக்கம் எங்களுக்கு அறவே இல்லை. புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா கட்டிக்காத்த இந்த இயக்கம் எப்போதும் உடையாது” என்று அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

You May Also Like

More From Author