சீன இயந்திரத் தொழில்துறை சம்மேளனம் 4ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் இயந்திரத் தொழில்துறை சீராக வளர்ந்துள்ளது.
உற்பத்திப் பொருட்களின் உற்பத்தியும் விற்பனையும் நிலைப்புடன் அதிகரித்துள்ளன. அவற்றில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு மேல் வருமானமுடைய இயந்திரத் தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 9 விழுக்காடு அதிகமாகும். தொழில்
இவ்வாண்டின் முற்பாதியில் 122 முக்கிய உற்பத்திப் பொருட்களில் 84 உற்பத்திப் பொருட்களின் உற்பத்தி கடந்த ஆண்டை விட, அதிகரித்துள்ளன. அவற்றில், வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை முறையே 1கோடியே 56லட்சத்து 21ஆயிரம் மற்றும் 1கோடியே 56லட்சத்து 53ஆயிரத்தை எட்டின. கடந்த ஆண்டை விட, முறையே 12.5விழுக்காடு மற்றும் 11.4விழுக்காடு அதிகரித்தன.
சீன இயந்திரத் தொழில்துறையின் மேம்பாடும் உயர் தர வளர்ச்சியும் அதிக சாதனைகளைப் பெற்று முனைப்புடன் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.