விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான GOAT – ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் நேற்று வெளியானது.
உலகம் முழுவதும் பலரும் இந்த படத்தை காண ஆர்வத்துடன் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.
இது தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு.
வெங்கட் பிரபு இயக்கிய, GOAT திரைப்படம், SATS முன்னாள் உளவாளி காந்தியின் கதையை பற்றியது.
படத்தின் வெற்றிக்காக பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் படத்தை பற்றி நடிகர் பிரசன்னா படத்தை வாழ்த்தியும், தனது மனைவி ஸ்னேஹாவையும் புகழ்ந்து ஒரு பதிவை இட்டுள்ளார்.
இப்படத்தில் மோகன், பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
GOAT படத்தில் நடித்ததற்கு மனைவி ஸ்னேஹாவை புகழ்ந்த பிரசன்னா
