கனமழையால் உயரும் அணைகளின் நீர்மட்டம்: ஆற்றில் குளிக்க தடை !

குமரியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக குழித்துறை தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

குமரியில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

You May Also Like

More From Author