தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் கடும் நடவடிக்கை – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

Estimated read time 0 min read

தொழிற்சங்கங்களின் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பிப்ரவரி 12ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்காமல், வழக்கம்போல பணிக்கு தவறாமல் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

பிப்ரவரி 12ஆம் தேதி வழங்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், வார விடுமுறை, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது நிலையான விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author