சீன வணிகத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவின் தேசிய விழா மற்றும் நிலா விழாவின் போது, சீன தேசியளவில் முக்கிய சில்லறை அங்காடிகள் மற்றும் உணவகங்களின் விற்பனைத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பசுமையான, நுண்ணறிவு தொடர்புடைய நுகர்வு மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. இதனிடையில், பசுமையான உணவுப் பொருட்களின் விற்பனை தொகை கடந்த ஆண்டை விட 27.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நுண்ணறிவு வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களின் விற்பனை தொகை 14.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மேலும், இவ்விடுமுறை காலத்தில் சேவை நுகர்வு அளவும் தொடர்ந்து விரிவாகி வந்துள்ளது. குறிப்பாக, சீனா சொந்தமாக தயாரித்த தலைசிறந்த திரைப்படங்கள் மிகவும் வரவேற்கப்பட்டன. ஆக்டோபர் 8ஆம் நாள் பிற்பகல் 3 மணி வரை,
தேசிய விழாக் காலத்தில் திரைப்பட வசூலானது 179 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.