பஞ்சமி திதியையொட்டி ஸ்ரீமங்கல வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!

மயிலாடுதுறை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீமங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீ மங்கள வாராஹி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து விரலி மஞ்சள் மற்றும் பலவகை வண்ணமலர் மாலைகளால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்கள் கூட்டாக சங்கல்பம் செய்து வாராஹி அம்மனின் ஸ்லோகங்களை கூறி வழிபாடு நடத்தினர். மேலும், வேண்டுதலை நிறைவேற்ற வாழை இலையில் அரிசியை பரப்பி தேங்காய் மூடியில் நெய்விளக்கு தீபமேற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

You May Also Like

More From Author