சர்வதேச சந்தையின் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,05,760 ரூபாய் க்கும், ஒரு கிராம் 13220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14442 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,376 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 235000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
