திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு – பக்தர்கள் அதிர்ச்சி

Estimated read time 0 min read

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் தரிசன நேரம் குறைக்கப்பட்டு இருப்பதாக கோவில்கள் வளாகத்தில் வைக்கப்பட்ட பதாகையால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ரூ.100 கட்டண தரிசனம் மாலை 6.30 மணி வரை மற்றும் பொது தரிசனம் மாலை 7 மணி வரை மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாற்றத்துக்கு உட்பட்டது. இதுவரை ரூ.100 கட்டண தரிசனத்திற்கு இரவு 8 மணி வரையும், பொது தரிசனத்துக்கு பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்பவும் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

You May Also Like

More From Author