சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 22ஆம் நாள் வியட்நாம் சோஷலிச குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற தோ லாம்வுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
வாழ்த்து செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த ஆண்டு வியட்நாமில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த சீன-வியட்நாம் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதாக பொது செயலாளர் என்குயேன பு ட்ரோங்குடன் இணைந்து அறிவித்தேன்.
இச்சமூகத்தின் உருவாக்கத்தை இரு நாடுகளின் வாரியங்கள் மற்றும் உள்ளூர் பிரதேசங்கள் விரைவாக முன்னேற்றி வருகின்றன. இதில் ஆக்கப்பூர்வ முன்னேற்றம் அடைந்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். சீன-வியட்நாம் உறவின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன்.
உங்களுடன் இணைந்து நெடுநோக்கு தொடர்பை நிலைநிறுத்தி, சீன-வியட்நாம் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கம் ஆழமான முறையில் நடைபெறுவதற்கு வழிகாட்டி, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைக் கொண்டு வர விரும்புகிறேன் என்று சுட்டிக்காட்டினார்.