“குடிநீர் விநியோகத்திற்காக அதிரடியாக ஒதுக்கப்பட்ட ரூ.340 கோடி..

Estimated read time 1 min read

தமிழகத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாதுகாப்பான குடிநீர் விநியோகம் மற்றும் அவசரத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், மாபெரும் நிதியை ஒதுக்கி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, ஒட்டுமொத்தமாக ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மக்கள் பெருமளவு கூடும் மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகம் நிலவும் பகுதிகளில் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்களின் அவசரத் தேவைகளைக் கருத்தில்கொண்டு உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் விநியோகப் பணிகளை எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாகத் தொடங்கும்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.

“>

அரசின் இந்த அதிரடி நிதி ஒதுக்கீடு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

You May Also Like

More From Author