வரும் 11ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

Estimated read time 1 min read

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணி சார்பில், வரும் 11ம் தேதி திருச்சியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தனது அறிக்கை வாயிலாக, உறுதி செய்துள்ளார்.

பிரதமர் மோடி, இம்மாதம் 1ம் தேதி புதுச்சேரி மற்றும் மதுரையில், மத்திய அரசின் சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்ததுடன், பிரசார பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார். முன்னதாக, கடந்த மாதம் 23ல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்றார்.

You May Also Like

More From Author