சென்னை : கடந்த சில நாட்களாகத் தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலையானது, சென்னையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 28-ஆம் தேதி அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,215-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,720-க்கும் விற்பனையானது.
அதனைத் தொடர்ந்து, அதற்கு முந்தைய நாளிலும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,155-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1,05,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இப்படியான சூழலில், நேற்று மீண்டும் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தங்கம் விலை சற்று அதிகரித்து, கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்தும் ஒரு சவரன் ரூ.1,05,840-க்கும் விற்பனையானது. இதனையடுத்து, இன்றும் தங்கம் விலையானது உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,255-க்கு விற்பனையாகிறது.
அதே சமயம், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நிலையாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமின்றி, சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
