தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்க அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் என சமீபத்தில் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கருவிழி பதிவு திட்டம் அமல்படுத்தப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடியாததால் கருவிழி பதிவு திட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தில் 90 சதவீத ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.