வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும், அதன் பூவில் இருந்து தொடங்கி, தண்டு வரை மருத்துவ குணங்களால் நிறைந்திருக்கும் என்பதை பலர் அறிந்திருப்பார்கள்.
குறிப்பாக இந்த வாழைத்தண்டினை உணவில் சேர்த்தால் உடலுக்கு பல ஆரோக்கிய பலன்களை வழங்குகின்றன.
இந்த செய்தியில், வாழைத்தண்டில் பயன்கள் மற்றும் அதன் செய்முறை பற்றி ஒரு பார்வையை பெறலாம்.
சிறுநீரக கற்களை வெளியேற்றும்:
வாழைத்தண்டின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று, சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றுவது. இது உடலில் சிறுநீர் உற்பத்தியை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் சிறுநீரகங்களில் உள்ள கழிவுகள் மற்றும் கிருமிகள் நீக்கப்படுகின்றன.
செய்முறை: வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் எலுமிச்சை பழ சாறு கலந்து குடித்தால், சிறுநீரக கற்களை உருவாகாமல் தடுக்கும்.