சீன வணிக அமைச்சகம் நவம்பர் 21ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில், சீனாவின் நாணயமற்ற அந்நிய நேரடி முதலீட்டுத் தொகை 11 ஆயிரத்து 583 கோடி அமெரிக்க டாலரை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் கலந்து கொண்ட நாடுகளில் சீனத் தொழில் நிறுவனங்கள் செய்த நாணயமற்ற நேரடி முதலீட்டுத் தொகை 2 ஆயிரத்து 665 கோடி அமெரிக்க டாலரை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மேலும், ஜனவரி முதல் அக்டோபர் திங்கள் வரையிலான காலகட்டத்தில், சீனா வெளிநாடுகளுடன் உடன்படிக்கை மூலம் மேற்கொண்ட திட்டப்பணிகளின் அலுவல் வருமானம் 12 ஆயிரத்து 438 கோடி அமெரிக்க டாலராகும், இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2 விழுக்காடு அதிகமாகும்.
புதிதாக கையொப்பமிடப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் மொத்த தொகை 17 ஆயிரத்து 765 கோடி அமெரிக்க டாலரை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 15.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.