நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!! 

Estimated read time 0 min read

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசினார். இதன் காரணமாக நடிகை கஸ்தூரியை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.

அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடிய நிலையில் அவரை சமீபத்தில் ஹைதராபாத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ‌ மகன் இருப்பதாகவும் அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதாலும் ஜாமின் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டார். மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி மனைவியும் கஸ்தூரிக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள மகன் இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை ‌ எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்காததால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author