2023ஆம் ஆண்டு 11ஆவது சீன அறிவியல் தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச உயர் தொழில்நுட்ப கண்காட்சி நவம்பர் 22ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் மியன்யாங் துவங்கியது. அறிவியல் தொழில்நுட்பங்களின் தலைமை, புத்தாக்கம் மற்றும் உருவமாற்றம், திறப்பு மற்றும் ஒத்துழைப்பு என்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சி 26ஆம் நாள் வரை நீடிக்கும்.
நடப்புக் கண்காட்சியில், 300க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள், தங்களது 3 ஆயிரத்துக்கும் மேலான உயர்தொழில்நுட்ப தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.
நாட்டின் முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றம், செயற்கை நுண்ணறிவு, மின்னணு தகவல், முன்னேறிய பொருள், உபகரணத் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய சாதனைகள் மற்றும் புதிய தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உயர்தொழில்நுட்ப கண்காட்சி தற்போது வரை 10 முறை நடத்தப்பட்டுள்ளது. இவற்றில் தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 7000 நிறுவனங்கள் 25ஆயிரத்துக்கும் மேலான பல்வகை தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.