38  நாடுகளுக்கு விசா விலக்கு கொள்கையை அறிவித்தது: சீனா

வெளிநாட்டுப் பயணிகளின் வசதிக்காக, வரும் நவம்பர் 30ஆம் தேதி முதல், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி நுழைய சீனா அனுமதி அளித்துள்ளது. சோதனை முறையில் உள்ள இந்த விசா விலக்குக் கொள்கை வருகிற 2025-ஆம் ஆண்டின் டிசம்பர் 31 ஆம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் இந்த முடிவை அறிவித்தார்.

மேலும்,  விசா விலக்கு கொள்கையை மேம்படுத்தை சீனா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பரிமாற்ற நோக்கத்திற்காக விசா விலக்கு அனுமதிக்கப்பட்டது.  சீனாவில் தங்கும் காலவரம்பு 15 நாட்களில் இருந்து 30 நாட்களுக்காக அதிகரிக்கப்படும் என்று லின் ஜியான் கூறினார்.

இந்த 9 நாடுகள் மற்றும் முன்பு அறிவிக்கப்பட்ட 29 நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த பயணிகள்,  வணிகம், சுற்றுலா, குடும்ப வருகை,  பரிமாற்ற நோக்கம் அல்லது சீனா வழியாக வேறு நாட்டுக்கு செல்வதற்காக விசா தேவையில்லாமல் 30 நாட்களுக்கு சீனாவுக்கு  பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author