APEC உச்சி மாநாட்டில் ஷி ச்சின்பிங் எழுத்து உரை

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், நவம்பர் 15ஆம் நாள் முற்பகல், பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தொழில் மற்றும் வணிகத் துறைத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் எழுத்து மூல உரை நிகழ்த்தினார்.


அவர் கூறுகையில், ஆசிய-பசிபிக் நாடுகள், பொருளாதார உலகமயமாக்கத்துடன் ஆழமாக இணைந்து, நலன் பொது சமூகமாகவும் பொது எதிர்கால சமூகமாகவும் மாறியுள்ளன. உலகமயமாக்கத்தின் திசைக்குச் சரியாக வழிக்காட்டி, பொது நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையுடைய உலகமயமாக்கத்தைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்றார்.


அவர் 3 முன்மொழிவுகளை முன்வைத்தார். முதலாவதாக, புத்தாக்கத்தின் இயக்காற்றலின் மூலம், உலகப் பொருளாதாரத்தின் வலிமையான அதிகரிப்பை முன்னேற்ற வேண்டும். இரண்டாவதாக, காலப்போக்கில் முன்னேறி, உலகப் பொருளாதார மேலாண்மை அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை முன்னேற்ற வேண்டும். மூன்றாவதாக, மக்களே முதன்மை என்ற கருத்தைக் கொண்டு, பொருளாதார சரிசமமற்ற நிலைமையைத் தீர்க்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


கடந்த 30 ஆண்டுகளாக, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பொருளாதாரம் வலிமையான அதிகரிப்பை நிலைநிறுத்தி, உலகத்தின் கவனத்தை ஈர்த்து சாதனைகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஆசிய-பசிபிக் பிரதேசம், உலகமயமாக்கத்தைத் தொடர்ந்து விரைவுபடுத்தி, நேர்மையான கோட்பாடுகளின் அடிப்படையில் புத்தாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்றார். மேலும், சீனா சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்கி, உலகப் பொருளாதாரத்துக்குத் தொடர்ந்து வலிமையான இயக்காற்றலை ஊட்டும். உயர்தர வளர்ச்சியையும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரக் கட்டுமானத்தையும் சீனா முன்னேற்றி, உலகப் பொருளாதாரத்தின் பயனுள்ள அதிகரிப்புக்கு வழிக்காட்டும்.

பசுமையான வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நின்று, உலக பசுமையான வளர்ச்சி முறை மாற்றத்துக்கு முக்கிய இயக்காற்றலை வழங்கும். மேலும் உயர்நிலை திறந்த பொருளாதார அமைப்புமுறையை உருவாக்கி, உலகத்துடன் வளர்ச்சி வாய்ப்புகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author