சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு கருத்தரங்கு 29ஆம் நாள் நியூயார்க்கில் நடைபெற்றது. சீன, அமெரிக்க தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக சங்கங்களின் சுமார் 300 பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
சர்வதேச வர்த்தகத்தின் முன்னேற்றத்துக்கான சீன கவுன்சிலின் தலைவர் ரென் ஹோங்பின் இக்கருத்தரங்கில் பேசுகையில், சீன மற்றும் அமெரிக்க பொருளாதாரங்கள், ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்வதில் அதிக வாய்ப்புகள் வாய்ந்தவை.
இரு தரப்பும் வினியோக சங்கிலி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, உலக வினியோக சங்கிலியின் நிலைத்தன்மையைப் பேணிகாக்கத் துணை புரிந்து, இரு நாடுகள், பிரதேசம் மற்றும் உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு மேலதிக இயக்காற்றலை ஊட்டும். சீன மற்றும் அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள், சீனச் சர்வதேச வினியோக சங்கிலி முன்னேற்ற பொருட்காட்சி என்ற மேடையைச் செவ்வனே பயன்படுத்தி, சீராகவும் தங்கு தடையின்றியும் இருக்கும் உலக வினியோக சங்கிலியைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என சர்வதேச வர்த்தகத்தின் முன்னேற்றத்துக்கான சீன கவுன்சில் விரும்புவதாக தெரிவித்தார்.
சர்வதேச வணிகத்துக்கான அமெரிக்க கவுனிசிலின் முதன்மை நிர்வாக அலுவலர் தாலி கூறுகையில், அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக சீனா விளங்குகிறது. சீன-அமெரிக்க உறவின் சீரான வளர்ச்சி, இரு நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் நலன்களைத் தந்துள்ளது. சர்வதேச வர்த்தகத்தின் முன்னேற்றத்துக்கான சீன கவுன்சிலுடன் ஒத்துழைப்பை ஆழமாக்கி, மேலும் திறந்த இணக்கமான சந்தையின் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கு பங்காற்ற வேண்டும் என சர்வதேச வணிகத்துக்கான அமெரிக்க கவுனிசில் விரும்புவதாக தெரிவித்தார்.