அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்லூரிக் கல்வி இயக்ககம்.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபட்டன.
நேற்று மாலை 6 மணி வரை, 2,34,883 மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
அரசு கல்லூரியில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், அது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் மே 24ஆம் தேதி ஆகும்.