மேற்கு வங்காளத் தேர்தலில் மாபெரும் திருப்பம்! பவானிபூரில் மமதா பானர்ஜி படுதோல்வி  

Estimated read time 1 min read

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் யாரும் எதிர்பாராத மாபெரும் அரசியல் திருப்பமாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை, அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் சுவேந்து அதிகாரி 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியைத் தோற்கடித்த சுவேந்து அதிகாரி, தற்போது மீண்டும் ஒருமுறை அவரை வீழ்த்தி மேற்கு வங்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்று முடிவில் பதிவான அதிகாரப்பூர்வ வாக்கு விவரங்கள்:
சுவேந்து அதிகாரி: 73,917 வாக்குகள்
மம்தா பானர்ஜி: 58,812 வாக்குகள்
வெற்றி வித்தியாசம்: 15,105 வாக்குகள்

More From Author