அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் தடை  

தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 பேர்/நிறுவனங்களை பங்குச் சந்தையில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அறிவித்துள்ளது.

தனது நிறுவனத்திற்கு வந்த நிதியை வேறு பணிகளுக்காக தவறாக மாற்றியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் விதித்துள்ளதுடன், பட்டியலிடப்பட்ட நிறுவனத்திலோ அல்லது ரிலையன்ஸ் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு இடைத்தரகரிலோ இயக்குநராக அல்லது முக்கிய மேலாளர் பணியாளர் (கேஎம்பி) உட்பட பத்திரச் சந்தையுடன் தொடர்புடைய பொறுப்புகளில் பணியாற்றவும் செபி தடை விதித்துள்ளது.

You May Also Like

More From Author