உலகளவில் முதலாவது 16 மெகாவாட் இழுவிசை-கால் மிதக்கும் காற்றாலை தளமான ஹையோ ஆன்லான், தெற்கு சீனக் கடலில் உள்ள லுஃபெங் எண்ணெய் வயலின் மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு, கடலில் உள்ள எண்ணெய் வயல்களுக்கு பசுமை மின்னாற்றல் வழங்கும் பணி தொடங்கியதாக சீனத் தேசிய கடல்சார் எண்ணெய் நிறுவனம் தெரிவித்தது. ஆழ்கடல்களில் மிதக்கும் காற்றாலை உபகரணத் தொழில் நுட்பங்களில் சீனா உலகின் முன்னணியில் உள்ளது என்பதையும், சீனாவின் கடல்சார் காற்றாலை வளர்ச்சிக்கு புதிய தொழில் நுட்ப வழி ஒன்றை வெற்றிகரமாக கண்டறிந்துள்ளது என்பதையும் இது குறிக்கிறது.
இந்த காற்றாலை தளம், கடற்கரையிலிருந்து 136கிலோமீட்டர் தொலைவிலும், 136 மீட்டர் ஆழத்திலும் உள்ள கடற்பரப்பில் உள்ள நிறுவப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய 110 மாடிக் கட்டிடத்தின் உயரத்திற்கு சமம். மேலும், 17ஆம் நிலை சக்திவாய்ந்த சூறாவளியின் தாக்குதலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சேவைக்காலம் 25 ஆண்டுகள் ஆகும்.
