ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதல் நிகழ்ந்த 81வது ஆண்டு நிறைவு தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் ஆகஸ்ட் 6ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், அணு ஆயுதங்களால் ஏற்பட்ட பேரழிவுகளும் துயரங்களும் மீண்டும் நிகழக்கூடாது என்றும், ஜப்பானிய இராணுவவாத ஆக்கிரமிப்பு மற்றும் விரிவாக்கத்தால் ஏற்பட்ட வரலாற்றுப் பாடத்தை ஒரு நிலையான எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நீண்டகாலமாக, ஜப்பானின் வலதுசாரி சக்திகள் வரலாற்று உண்மைகளை பொய்யாக்கி, சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தைப் பெற “அணுகுண்டுகளால் பாதிக்கப்பட்டவர்” என்ற பெயரை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தனது படையெடுப்பினால் அண்டை நாடுகளில் ஏற்பட்ட கோடிக்கணக்கான பேர் உயிரிழப்பு சம்பவத்தை ஜப்பான் வேண்டுமென்றே குறைத்துக் கூறி வருகின்றனர். அண்மையில், ஜப்பானிய அரசு தனது இராணுவ விரிவாக்கத்தில் ஈடுபடுவதோடு, அணு ஆற்றல் இல்லாத கோட்பாடுகளைச் சீர்குலைக்க முயன்று வருகின்றது. இந்த இரட்டை வேட அணுகுமுறை, உலகெங்கிலும் உள்ள அமைதியை விரும்பும் மக்களுக்கு எதிரான ஒரு ஆத்திரமூட்டலாகவும், வரலாற்று நீதியை அவமதிப்பதாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
