சனே தகைச்சி தலைமையமைச்சராக பதவி ஏற்றப் பின் ஜப்பான் அரசு வெளியிட்ட முதலாவது தற்காப்பு வெள்ளையறிக்கை சர்வதேச சமூகத்தில் பெருமளவில் விமர்சனத்தைப் பெற்றுள்ளது. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, ஜப்பானின் புதுவித இராணுவவாதம், இராணுவ விரிவாக்கத்தை விரைவுபடுத்தி வருகிறது. சர்வதேச சமூகம் இதற்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று 83.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
மேலும், ஜப்பான், இராணுவ விரிவாக்க செயல்களை, பாரம்பரிய தேசிய பாதுகாப்பு துறையிலிருந்து, பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தொழில் துறை, பொது மக்களின் அன்றாட வாழ்க்கை முதலியவற்றுக்குப் பரவல் செய்ய முயன்று வருகிறது. இது குறித்து, இத்தகைய சமூக இராணுவமயமாக்கல் போக்கு, சர்வதேச சமூகத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று 79.1 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
