முழு சந்திர நிலவியல் படத்தை சீனா வெளியீடு

Estimated read time 0 min read

சீன அறிவியல் ஆய்வுக் குழு முழுமையான சந்திர நிலவியல் படத்தை தொகுத்து முடித்துள்ளது. 280 சென்டிமீட்டர் நீளமும் 120 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட முதன்மை படத்திலும் தெற்கு மற்றும் வடக்கு துருவப் பகுதிகளின் நிலவியல் படங்களிலும் 13 ஆயிரம் தாக்கப் பள்ளங்களும் 81 தாக்க வடிநிலங்களும் துல்லியாக குறிக்கப்பட்டுள்ளதோடு, 14 நிலவியல் அமைப்புகளும் 17 கற்பாறை வகைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன என்று ஆகஸ்ட் 6ஆம் நாள் தகவல் வெளியானது.

சாங்ஏ திட்டப்பணி உட்பட புதிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், சந்திர கடிகாரத்தை சரிசெய்தல், சந்திர பொருட்கள் பட்டியலை புதுப்பித்தல், சிறப்பு வரைபட அளவீட்டை வகுத்தல் ஆகிய மூன்று புத்தாக்க சாதனைகள் இப்படத்தின் தொகுப்பு பணியில் படைக்கப்பட்டுள்ளன.

புதிய முழு சந்திர நிலவியல் படத்தின் வெளியீடு, சீனாவின் சந்திர ஆய்வு நிலையத்தின் கட்டுமானம், தரையிறக்கப் பகுதி தேர்வு, ஆழ் விண்வெளி ஆய்வு ஆகியவற்றுக்கு அறிவியல் ஆதாரத்தை அளிப்பதோடு, சூரியக் குடும்பத்தின் பரிணாமம் பற்றிய மனிதகுலத்தின் ஆய்வுக்கும் சீனாவின் புதிய பங்களிப்பை வழங்கியுள்ளது என்று சீன நிலவியல் அறிவியல் கழகத்தின் நிலவியல் நிறுவனத் தலைவர் யாங் ச்சிமின் கூறினார்.

You May Also Like

More From Author