சீனாவின் இயந்திரத் தொழில் துறையின் சீரான வளர்ச்சி

Estimated read time 0 min read

சீன இயந்திரத் தொழில் கூட்டமைப்பு ஆகஸ்டு 6ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் இயந்திரத் தொழில் துறை சீரான நிலையில் இயங்கி வருகிறது.

இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில், சீனாவின் இயந்திரத் தொழில் துறையில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. பொது சாதனங்கள், சிறப்பு சாதனங்கள், வாகனங்கள், மின்சார இயந்திரங்கள், அளவீட்டு கருவிகள் ஆகியவற்றின் தயாரிப்புத் தொழில்களின் அதிகரிப்பு மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது என்று புதிய தரவுகள் வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் இயந்திரத் தொழில் துறையில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் வருமானம் 16 லட்சத்து 10 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.5 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author