தபால் நிலையங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அதில் பல வருடங்களாக செயல்பாட்டில் இருக்கும் ஒரு சேமிப்பு திட்டம் தான் RD திட்டம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் RD திட்டத்தில் தனது சேமிப்பை தொடங்கலாம். சிறுவர் சிறுமிகளுக்கு பெற்றோர்கள் பாதுகாப்பாளராக நியமிக்கப்படுவார்கள்.
100 ரூபாயில் தொடங்கி 1000, 2000, 10,000, 20,000 என ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றபடி சேமிப்புத் தொகையை நிர்ணயம் செய்யலாம். RD திட்டத்தின் விதிமுறைகளின் படி ஐந்து வருடத்திற்கு பிறகு கணக்கை முடித்து 6.2 சதவீத வட்டியுடன் முதிர்வு தொகையை பெற முடியும்.
அதே நேரம் கணக்கு தொடங்கிய மூன்று வருடத்தில் கூட RD திட்டத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்தால் முடித்துக் கொள்ளலாம். மேலும் ஐந்து வருடத்திலிருந்து கூடுதல் வருடத்திற்கும் சேமிப்பை நீட்டிக்கலாம். அது ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்து.
ஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து வருடங்கள் RD திட்டத்தில் சேமித்தார் என்றால் அவருக்கு 7,13,659 ரூபாய் முதிர்வு தொகையாக கிடைக்கும். இதுவே 20 ஆயிரம் ரூபாய் வைத்து கட்டினால் 14,27,315 ரூபாய் முதிர்வு தொகையாக கிடைக்கும். நீங்களும் RD திட்டத்தில் சேமிக்க நினைத்தால் அருகாமையில் இருக்கும் தபால் நிலையங்களுக்கு சென்று கணக்கை துவங்கி கொள்ளலாம்.