ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு அதானி மறுப்பு அறிக்கை வெளியீடு  

இந்தியாவின் பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியின் தலைவர் சமீபத்திய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தூண்டுதல்களின் பேரில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி கடுமையாக நிராகரித்துள்ளார்.
செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் ஷார்ட்-விற்பனை மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ள அதானி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு ஆதாயம் பெற்றுள்ளதாக ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும், அதானி நிறுவனத்திற்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களில் அவர்களுக்கு பங்குகளும் வழங்கப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
எனினும், இதை மறுத்துள்ள செபி தலைவர், அதிகாரிகள் கோரினால் தனது எந்தவித நிதி ஆவணத்தையும் வெளியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author