பரியேறும் பெருமாள் படம் மூலம் தனக்கென்ன தமிழ் திரையுலகில் ஒரு முத்திரையை பதித்தவர் தான் மாரி செல்வராஜ்.
தொடர்ந்து, தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பில் மாமன்னன் போன்ற படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டார்.
அதன் பின்னர் படத்தயாரிப்பில் இறங்கி அடுத்த படத்தை தற்போது இயக்கியுள்ளார்.
‘வாழை’ என பெயரிட்டுள்ள இந்த படம் அவருடைய வாழ்க்கையின் சில பக்கங்கள் என பல இடங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் ட்ரைலர் மற்றும் ஸ்பெஷல் ஷோ பார்த்து திரை பிரபலங்கள் பலரும் அவரை புகழ்ந்த நிலையில், இன்று படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்தவர்களின் விமர்சனம் எப்படி இருக்கு என்பதை தெரிந்து கொள்வோம்.