Web team
இன்னொரு தாஜ்மஹால்!
கவிஞர் இரா.இரவி !
மதுரையின் பெருமைகளில் ஒன்றாக விளங்கும்
மன்னர் திருமலை நாயக்கர் மகால் இன்னொரு தாஜ்மகால்!
மனைவி மும்தாஜ் இறந்த பின் ஷாஜகான்
மனைவியின் நினைவாக கட்டியது தாஜ்மகால்!
மனைவி இருக்கும்போதே திருமலை மன்னர் கட்டி
மனைவியிடம் கேட்டார், அரண்மனை எப்படி?
பெரிய வீட்டுப் பெண்ணான ராணி சொன்னார்,
பெரிதாக இல்லை என் அப்பன் அரண்மனையை விட!
இப்போது இருப்பது போல மூன்று மடங்கு
இருந்ததாம் மன்னர் கட்டிய அரண்மனை !
ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொண்டு
எழுப்பிய் மாளிகை கொள்ளை அழகு !
திருமலை மன்னர் அரண்மனை வந்து பாருங்கள்
தாஜ்மகால் போலவே கூம்பு வடிவ கோபுரங்கள் !
இரும்பு சிமிண்ட் வராத காலத்திலேயே
இரும்பை விட உறுதியாக கட்டிய மாளிகை !
இத்தாலிய மொகாலாய தமிழக கட்டிடக்கலைஞர்கள்
இமயம் போல எழுப்பிய மாளிகை !
பிரம்மாண்டமான தூண்கள் வந்து பார்ப்பவர்களை
பிரமிப்பில் ஆழ்த்தி விடும் உண்மை !
பளிங்கு கற்களால் ஆனது தாஜ்மஹால்
பளபளக்கும் தூண்களால் ஆனது திருமலை நாயக்கர் மகால்!
தாஜ்மகால் என்று அழைப்பது போலவே
திருமலை நாயக்கர் மகால் என்று அழைக்கின்றனர்!
வெளி நாட்டவர்கள் விரும்பிடும் தாஜ்மகால்
வெளி நாட்டவர்கள் வியக்கும் திருமலை நாயக்கர் மகால் !
திரைப்படங்கள் பல இங்கே எடுக்கப்பட்டது
தரணியில் அறியதவர் யாருமில்லை!
உலக அழகி ஐஸ்வர்யாராய் பார்த்துவிட்டு
உடன் ‘என்னை விட அழகு’ என்று பாராட்டிய மாளிகை !
வடக்கே யமுனையின் கரையில் தாஜ்மகால்
தெற்கே வைகையின் கரையில் திருமலை நாயக்கர் மகால்.