தாம்பரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் தற்போதைய ஆட்சி முறை மாற வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.
ஒருபுறம் தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு, மறுபுறம் மதுக்கடைகள் மூலம் பெண்களின் தாலியை அறுக்கும் சூழலை உருவாக்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மிகவும் தரம் குறைவாக இருப்பதாகவும், அந்த அரிசியை எந்த அமைச்சரோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ வாங்கி உண்பதில்லை என்றும், ஏழை மக்களுக்கு மட்டும் ஏன் தரம் குறைந்த அரிசி வழங்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
