தமிழர் ஆய்வு மையத்தின் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருபெரும் விழா நடை பெற்றது.
விழாவிற்கு ஆய்வு மையத்தின் தலைவர் வழக்கறிஞர் சி.சே.ராசன் தலைமை வகித்தார்.
வழக்கறிஞர்கள் தமிழ்முனி எட்வின், சி.எம். ஆறுமுகம், ராபர்ட் சந்திரகுமார், கருணாநிதி, தாய் இல்லம் புஷ்பராஜ், குருகுல ஒளி இயற்கையம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூலை தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் வெளியிட, திரைப்பட இயக்குநர் அமீர் பெற்றுக் கொண்டார்.
நூலின் சிறப்பு குறித்து மூத்த வழக் கறிஞர்கள் ஹென்றிடிபேன், அருள்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைக்கப்பட்டு, விழாவில் கலந்து கொண்டோருக்கும், பேருந்து நிலையப் பயணிகளுக்கும்,சிறு வியாபாரிகள் மற்றும் உழைக்கும் தொழிலாளர் களுக்கும் மதுரை துணை மேயர் டி.நாகராஜன் வழங்கினார்.
விழாவில் அகர்வால் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் பத்ரிநாராயணன், காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அழகப்பன், சமூக ஆர்வலர் கருத்தம்மா, அருள்திரு பால்மைக் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
குமரி முதல் சென்னை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு குறள் வழிச்சாலை எனப் பெயரிடவும், வழிநெடுக குறள்வழிப் பூங்கா அமைக்க வும் விழாவில் தீர்மானம் நிறை வேற்றப் பட்டது.
