கடந்த சில நாட்களில் உலக நாடுகள் சீனாவுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்துகின்றது.
உலகின் 2ஆவது பொருளாதார நாடான சீனாவுடன் மேலதிகமான நாடுகள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரும்புகின்றன. தாராள வர்த்தகத்துக்கு உறுதியாக ஆதரவு அளிப்பது, பலதரப்புவாதத்தை உறுதியாக பேணிக்காப்பது, ஒத்துழைப்பிலும் கூட்டு வெற்றியிலும் ஊன்றி நிற்பது, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிப்பதிலும் சமநிலையில் கலந்தாய்வு மேற்கொள்வதிலும் ஊன்றி நிற்பது ஆகிய 4 முன்மொழிவுகளை உலக பொருளாதார மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தில் சீனா முன்வைத்தது. கொந்தளிப்பைக் கொண்ட உலகிற்கு உறுதித்தன்மையை இது அளித்துள்ளது. நம்பத்தக்க நிலையான திறந்த கூட்டாளியாக சீனா திகழ்கின்றது என்பது இதன் மூலம் உலகிற்கு தெரிகிறது. கொள்கை ரீதியாக கடந்த சில ஆண்டுகளில், பொருளாதார உலகமயமாக்கத்தை சீனா உறுதியாக முன்னேற்றி வருகின்றது.
அதேவேளையில், நிலையான சீன பொருளாதார நிலைமை, உலக பொருளாதாரத்திற்கு நம்பிக்கையையும் ஆற்றலையும் வழங்கியது. மேலும் முக்கியமானது, சீனா திறப்பு கொள்கையை மேற்கொண்டு, உயர்தர வளர்ச்சி சாதனைகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்கின்றது. புதிய ஆண்டில், சீனா உலக பொருளாதாரத்திற்கு மேலதிக வளர்ச்சி ஆற்றலை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
