தமிழக வானிலை நிலவரம்: இன்று 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை  

Estimated read time 1 min read

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக – இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை வளிமண்டல அலை காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜனவரி 25) பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author