ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களித்தது.
ஈரானுக்கு எதிரான இந்தத் தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறி, இந்தியா அதற்கு எதிராக தனது வாக்கைப் பதிவு செய்தது.
இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கு ஈரான் அரசு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி, எக்ஸ் சமூக வலைதளத்தில் இந்திய அரசுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈரானுக்கு ஆதரவாக இந்தியா வாக்கு
