டைனோசர்களின் அழிவுக்கு காரணம் என்ன; விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு  

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்த நேரத்தில் பூமி பல பெரிய விண்கற்களால் தாக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கினியா கடற்கரையில் ஒரு பெரிய விண்கல் பள்ளத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள், அதில் ஆய்வு செய்து பெற்ற முடிவுகளின் அடிப்படையில் இதைக் கண்டறிந்துள்ளனர்.

ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தின் கடல் புவியியலாளர் டாக்டர் உயிஸ்டீன் நிக்கல்சன் என்பவரால் இந்த பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் அதை முதன்முதலில் 2022 இல் கண்டறிந்தார். சுமார் கால் மைல் அகலத்தில் ஒரு விண்கல் உருவாக்கிய இந்த நாடிர் பள்ளத்தின் விரிவான ஸ்கேன்கள், அது கிட்டத்தட்ட 45,000 மைல் வேகத்தில் பூமியில் மோதி ஐந்து மைல் அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியதை வெளிப்படுத்துகிறது.

You May Also Like

More From Author