ஸ்மார்ட் என்பது, 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி பற்றிய ஒருமித்த மனப்பதிவு என்று இந்திய செய்தியாளர் ஒருவர் இந்திய டைம்ஸ் இணையதளத்தில் கருத்து தெரிவித்தார்.
5ஜி, பொருள் இணையம், பெருந்தரவு, பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்களின் ஆதரவுடன், ஹாங்சோ 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி அரங்குகளின் உள்ளேயும் வெளியேயும் உயர் தொழில் நுட்பக் கூறுகள் நிறைந்து காணப்படுகின்றன.
சர்வதேச சமூகத்தில் இது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில், ஸ்மார்ட் முறையில் இப்போட்டியை நடத்தும் கருத்தை ஹாங்சோ முதன்முறையாக முன்வைத்தது.
விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல, சீனாவின் டிஜிட்டல் தொழில் நுட்பத்தையும் வெளிப்படுத்தும் மேடையாக நடப்பு விளையாட்டுப் போட்டி திகழ்கிறது என்று கருதப்படுகிறது.
புத்தாக்க ஆற்றலின் சேமிப்பிலிருந்து இத்தகைய சாதனை பெறப்படுகிறது. சீனாவின் டிஜிட்டல் நகரம் என ஹாங்சோ போற்றப்படுகிறது.
இந்நகரம் அமைந்துள்ள ட்சேஜியாங் மாநிலம், சீன நவீனமயமாக்கத்தின் முன்னோடியாக விளங்குகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் ஆசிய விளையாட்டுப் போட்டி, சீனாவின் நவீனமயமாக்கத்தை அறிந்து கொள்வதற்கு சிறந்த ஜன்னலாகும்.
தற்போதைய உலகில் நிலவும் சவால்களைச் சமாளிப்பதற்கு வளர்ச்சியின் ஆற்றல் தேவைப்படுகிறது.
ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் புத்தாக்கம், பசுமை, மானுட பண்பாட்டியல் உள்ளிட்ட தனிச்சிறப்புகள், சீன நவீனமயமாக்கலின் சாதனையை வெளிப்படுத்தும் அதேவேளை, புதிய வளர்ச்சி கருத்தை சீனா செயல்படுத்தி உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான புதிய இயக்காற்றலாக மாறும்.