சென்னைக்கு 2 நாட்கள் ‘ரெட்’ அலர்ட்!  

அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்) அதி கனமழை பொழிவு இருக்குமென ரெட் அலெர்ட் தந்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை, இடைவெளியின்றி தொடர்ந்து பெய்து வருகிறது.
தொடர் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்பதால், தமிழக அரசு மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

More From Author