சிறந்த கழிவு மேலாண்மைக்கு ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற சீன நகரங்கள்

ஹாங்சோ, சான்யா, சூசோ ஆகிய 3 சீன நகரங்கள், கழிவுகளைக் குறைக்கவும் சுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்தவும் துணிவு மற்றும் லட்சியம் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதற்காக, ஐ.நாவின் ஓர் ஆலோசனை சபையின் அங்கீகாரம் பெற்றுள்ளன.

பூஜ்யம் கழிவு நோக்கிய 20 நகரங்கள் என்ற முன்னெடுப்பில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதி 20 நகரங்களில் இம்மூன்று நகரங்கள் இடம் பிடித்துள்ளன. ஐ.நா. தலைமை செயலாளரின் பூஜ்யம் கழிவு ஆலோசனை சபையால் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பு, ஐ.நா. மனித குடியிருப்பு திட்ட அலுவலகம் மற்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அலுவலகத்தின் ஆதரவு பெற்றுள்ளது. சர்வதேச பூஜ்யம் கழிவு தினமான மார்ச் 30ஆம் தேதிக்கு முன், தொலைநோக்கு தன்மை வாய்ந்த கழிவு மேலாண்மை திட்டத்தை வகுப்பதற்காக இந்த நகரங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளது.

 

You May Also Like

More From Author